குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் கைது
வாணியம்பாடியில் குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டார்.;
ஆம்பூரை அடுத்த சின்னபள்ளிகுப்பதை சேர்ந்தவர்கள் விக்ரம் (வயது 20), தேவா (20), ஸ்டீபன் ராஜ் (22). இவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டு குடி போதையில் கத்தியை காட்டி அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இது சம்மந்தமாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தார்.