தஞ்சை அரண்மனை எதிரே கொண்டிராஜபாளையம் பகுதியில் வீடு கட்டுவதற்கு பில்லர் போடுவதற்கு பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பசுமாடு திடீரென அந்த பள்ளத்தில் விழுந்தது. அந்த பள்ளம் 8 அடி ஆழம் உடையது. ஆனால் அந்த பசுமாட்டால் வெளியே வரமுடியில்லை. இதையடுத்து அந்த வழியாக சென்ற கோபி என்பவர் தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவின் பேரில், உதவி அலுவலர் தியாகராஜன், சிறப்பு நிலை அலுவலர் ரவி மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.