மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு சாவு
மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு இறந்தது.;
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகிரி. இவரது மனைவி அழகம்மாள். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் தனது பசு மாட்டினை வீட்டு வாசலில் உள்ள புளியமரத்தடியில் கட்டியுள்ளார். இந்த நிலையில் இரவு பெய்த மழையின் காரணமாக அந்த வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது. சத்தம் கேட்டு வெளியே வந்த அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர் மாடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மின்சார ஊழியர்கள் மின்வயர்களை சரிசெய்தனர். இறந்து போன மாட்டினை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.