நிலத்தின் கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றக்கோரிஅடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்த தம்பதிகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலத்தின் கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-21 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 78), விவசாயி. இவர் தனது நிலத்தின் கூட்டுப்பட்டாவைதனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22 முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். 3, 4 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மனமுடைந்த ராமகிருஷ்ணன் நேற்று காலை தனது மனைவி பாக்யலட்சுமியுடன் (60) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு கோஷம் எழுப்பினார். பின்னர் இருவரும் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னணு ரேஷன் கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க சென்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் இருவரும் மனு அளித்துவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்