மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி

சிதம்பரத்தில் மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-09-03 20:26 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது 25), ராஜாராமன் (23). சகோதரர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாலமான் ஓடையில் வலை மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய வலையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று சிக்கியது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த நாட்டுத்துப்பாக்கியை அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது, நரிக்குறவர்கள் பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கி என்பது தெரிந்தது. தொடர்ந்து அந்த நாட்டுத்துப்பாக்கியை ஓடையில் வீசிவிட்டு சென்றது யார் என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்