விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-08 20:04 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மாவடி நெறிஞ்சிவிளையை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன் செல்வகுமார் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மதியம் மாவடியில் இருந்து களக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கோவில்பத்து பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் செல்வகுமார் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்