கழுகுமலை அருகேகட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கழுகுமலை அருகேகட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதேசமயம் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்து வந்த அவர் நேற்று மதியம் கண்மாய்க்கு அருகில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட கருத்தப்பாண்டிக்கு திருமணமாகி ராமலட்சுமி (37) என்ற மனைவியும், ரஜிதா, சந்தியா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்