ஆதம்பாக்கத்தில் தோழிக்கு 'மிஸ்டு கால்' தந்த கல்லூரி மாணவருக்கு அடி-உதை
ஆதம்பாக்கத்தில் தோழிக்கு ‘மிஸ்டு கால்’ தந்த கல்லூரி மாணவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் ரெயிலில் வந்தபோது அதே ரெயிலில் வந்த ஒரு பெண்ணை காட்டி தன்னுடன் டியூசனில் படித்த பெண் என கூறினார். இதை கண்ட அந்த பெண்ணின் நண்பரும், புதுச்சேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ராயப்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவர், திருவான்மியூர் மாணவரை கண்டித்தார். இந்த நிலையில் திருவான்மியூரைச் சேர்ந்த மாணவர், அந்த பெண்ணின் செல்போனை வாங்கி அவரை அழைக்க 'மிஸ்டு கால்' கொடுத்தார். இதுபற்றி அந்த மாணவி, தனது நண்பனிடம் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திருவான்மியூர் கல்லூரி மாணவரை செல்போனில் ஆதம்பாக்கம் வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்தார்.
இது குறித்த புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோழிக்கு மிஸ்டு கால் தந்த கல்லூரி மாணவரை தாக்கிய ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.