மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவன் பலி
சிவகாசியில் மோட்டார்சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவன், மாடு குறுக்கே வந்ததால் தவறி விழுந்து பலியானார்.
சிவகாசி,
சிவகாசியில் மோட்டார்சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவன், மாடு குறுக்கே வந்ததால் தவறி விழுந்து பலியானார்.
கல்லூரி மாணவர்
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் சதானந்தம் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இரவு நேரத்தில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இரவு பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மாடு சாலையின் குறுக்கே வந்துள்ளது. அப்போது ஆகாஷ் திடீர் பிரேக் போட்ட போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.