குட்டையில் விழுந்த குழந்தை பலி

விருதுநகரில் குட்டையில் விழுந்த குழந்தை பலியானது.

Update: 2023-06-02 19:09 GMT


விருதுநகர் அருகே உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர்கள், பாலமுருகன்-நிவேதா தம்பதியினர். இவர்களுடைய மகன் தர்ஷன் (வயது1½). வீட்டின் அருகே தண்ணீர் தேங்கியுள்ள குட்டையில் நேற்று மாலை தர்ஷன் எதிர்பாராதவிதமாக விழுந்து இறந்தான். குழந்தையை காணவில்லை என தேடிய நிவேதா, குழந்தை அருகில் உள்ள குட்டையில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை தர்ஷன் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்