தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த குழந்தை பலி
தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த குழந்தை பலியானது
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள கரிசக்காலம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், (வயது 32). கூலித் தொழிலாளி. இவருடைய 2 வயது குழந்தை ருத்ரபாண்டி. இவர் ராயபாளையத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவிற்காக குடும்பத்துடன் சென்றிருந்தனர். உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்றிருந்த குழந்தை அங்கு வீட்டில் இருந்த தின்னரை குடிநீர் என நினைத்து தவறுதலாக குடித்து மயங்கி விட்டது. உடனடியாக குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.