குறுவட்ட அளவிலான செஸ் போட்டி

குறுவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

Update: 2023-08-11 19:02 GMT

ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் ரவிக்குமார், ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் பரிசுகளை வழங்கினார். இப்போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்