சன்னதுபுதுக்குடியில் சாலையோர தடுப்புச் சுவரில் இருந்து மதுபோதையில் தவறி கீழே விழுந்த மாட்டுதரகர் பலியானார்.
சன்னதுபுதுக்குடியில் சாலையோர தடுப்புச் சுவரில் இருந்து மதுபோதையில் தவறி கீழே விழுந்த மாட்டுதரகர் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடியில் சாலையோர தடுப்புச்சுவரில் இருந்து மதுபோதையில் தவறி கீழே விழுந்த மாட்டுதரகர் பலியானார்.
மாட்டு தரகர்
கங்கைகொண்டான் இராஜபதி நடுத்தெருவை சேர்ந்த வேல்கோனார் மகன் சுடலைமுத்து (வயது 55). இவர் மாடு தரகர். இந்த நிலையில் நேற்று மேலப்பாளையம் சந்தைக்கு மாடு வியாபாரத்திற்கு சென்றுள்ளார். வியாபாரத்தை முடித்து ெகாண்டு வெளியே வந்த அவர் மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அவர் சன்னதுபுதுக்குடி டாஸ்மாக் கடை அருகே மேட்டுப்பிரான்சேரி ரோட்டிலுள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் ஏறி உட்கார்த்துள்ளார்.
தடுமாறி விழுந்து சாவு
சிறிது நேரத்தில் அதிலிருந்து அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோனி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த சுடலைமுத்து உடலை போலீசார் கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன சுடலைமுத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும், காளான்கரையான் என்ற மகனும், உச்சிமாகாளி என்ற மகளும் உள்ளனர்.