சாராயம் விற்ற பெண் மீது வழக்கு
ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற பெண் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.;
ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம். வட்டத்தில் அதேப் பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 56) என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தேன்மொழி மண்பானையில் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அளித்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.