குறிஞ்சிப்பாடி அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.;

Update: 2023-06-27 20:33 GMT

குறிஞ்சிப்பாடி அருகே மேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி மகன் முரளி (வயது 28). இவருக்கும் வடலூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். இதையடுத்து அந்த மாணவியை கடந்த ஆண்டு, அதாவது அந்த மாணவிக்கு 17 வயது இருக்கும் போது, அவரிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். பிறகு வாடகை வீடு எடுத்து, அந்த மாணவியை முரளி கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அந்த மாணவி தற்போது 2 மாத கர்ப்பிணியானார். இதை அறிந்த முரளி, அந்த மாணவியுடன் வாழ மறுத்து தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி கருவை கலைக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இது பற்றி அறிந்ததும் டாக்டர்கள் நெய்வேலி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் முரளி மீது நெய்வேலி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்