பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

அரசு பஸ் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-05-15 00:15 IST

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் குப்பங்குழி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அதேபகுதியை சேர்ந்த ராபிட்சன் டேவிட்பில்லா (வயது 23) என்பவர், பஸ்சை திடீரென வழிமறித்து, பஸ் கண்டக்டரான முட்டத்தை சேர்ந்த கணேஷ்(41) என்பவரிடம் வீண் தகராறு செய்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ராபிட்சன் டேவிட் பில்லா மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்