பெண் வக்கீலை மிரட்டியவர் மீது வழக்கு
பெண் வக்கீலை மிரட்டியவர் மீது வழக்கு ;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெனிட்டாமேரி (வயது 28). வக்கீல். இவர் கண்டமங்கலம் பகுதியில் புதிதாக அலுவலகம் கட்டி வருகிறார். அதே ஊரைச்சேர்ந்த பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த பாபு (25) என்பவர் ஜெனிட்டாமேரி கட்டி வரும் புதிய அலுவலக கட்டிட ஜன்னல் கதவை உடைத்துள்ளார். மேலும் ஜெனிட்டாமேரியையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாபு மீது திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் துரையரசன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் வடக்கு பூதலூர் பகுதியில் அனுமதி இன்றி முத்தரையர் சங்க தலைவர் பிறந்தநாள் குறித்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் பிளக்ஸ் பேனர் வைத்து இருந்த திருவையாறு தொகுதி வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர் வீரமணி (31) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.