உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக மாணவரின் தந்தை மீது வழக்கு

வந்தவாசியில் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக மாணவரின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-27 12:57 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த 17 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பதும், உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மாணவரின் தந்தை மீது மோட்டார் வாகன சட்ட பிரிவுகளின் கீழ் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்