தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாகுடியை சேர்ந்த செல்லையா மகன் அருணாசலம் (வயது 44). விவசாயி. இவருக்கும் உறவினரான ஸ்ரீவைகுண்டம் இல்லத்தார் தெருவை சேர்ந்த உடையார் மனைவி இசக்கியம்மாள் (42) குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இசக்கியம்மாள், அமுதுண்ணாகுடியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது அருணாசலத்தின் மனைவியிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதத்தில் இசக்கியம்மாளை அருணாசலம் அவதூறாக பேசியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அருணாசலம் மீது சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.