வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீது வழக்கு
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
லாலாபேட்டை அருகே உள்ள கம்மநல்லூர் பகுதியை சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி நாகவள்ளி (56). இந்த தம்பதியின் மகன் நவநீதகிருஷ்ணன் (35). இவர்கள் 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சூரியன் என்பவர் நவநீதகிருஷ்ணனை பார்த்து கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நீ சாட்சி சொல்ல வரக்கூடாது என கூறி மிரட்டி அடித்து கீழே தள்ளினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த நவநீத கிருஷ்ணன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின் பேரில், லாலாபேட்டை போலீசார் சூரியன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.