சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்கு

நெல்லை மேலப்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2022-10-17 20:32 GMT

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது மேலப்பளையம் பீடி காலனி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்