பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-01-23 18:45 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு வாணிப தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி சத்யா (வயது 35). கூலி தொழிலாளி. இந்த நிலையில் அதேபகுதியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி மகன் ராஜா(30) என்பவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தார். அப்போது சத்யா யாரை திட்டுகிறாய் என ராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜா, சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சத்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்