பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்கு
ஆவூர்:
விராலிமலை தாலுகா, நீர்பழனியில் கடந்த 13-ந் தேதி பிள்ளையார் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோவில் திருவிழாவை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் நடத்தி வந்தனர். அதை பிடிக்காத மற்றொரு தரப்பினர், திருவிழா நடத்திய நபர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகேசனை தாக்கியதாக நீர்பழனியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோவில் திருவிழாவை சீர்குலைக்க நினைத்து தகராறில் ஈடுபட்டதாகவும், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நீர்பழனியை சேர்ந்த குமார் மனைவி ரெங்கநாயகி (வயது 45) என்பவர் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மகன் சதீஷ்குமார், தங்கராசு மகன் முருகேசன், கோவிந்தராஜ், நீர்பழனியை சேர்ந்த வீரமுத்து மனைவி சரசு, கருணாகரன் மகன் வசந்த், சுப்பிரமணி மகன் கார்த்திக், ராஜேந்திரன் மகன் ஆனந்த் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.