பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-15 20:27 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி. அதே பகுதியில் வடிவேல்(வயது 45) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் சுமார் 8 நாய்கள் வளர்த்து வந்ததாகவும், அதில் ஒரு நாய் இளங்கோ மகனை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இளங்கோ குடும்பத்தினர் வடிவேல் குடும்பத்தினரிடம் சென்று கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இளங்கோவின் மகன் மீது வடிவேலுவின் மகன் சிறுநீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளங்கோ மற்றும் அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் வடிவேலு குடும்பத்தினரிடம் கேட்க சென்றபோது சாதி ெபயரைக்கூறி, தரக்குறைவாக பேசியதோடு, சம்பவத்தன்று ராசாத்தியை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து ராசாத்தி மணப்பாறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வடிவேலு, அவரது மனைவி அழகுமணி(37) உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்