மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-30 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரக்கு வேன் மோதியது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா விளங்குடியை சேர்ந்தவர் உத்திராபதி. இவருடைய மகன் மணிவேல் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சந்தோஷ் (20). நண்பர்களாக இவர்கள் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கடமங்குடியில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை மணிவேல் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக எரவாஞ்சேரியில் இருந்து வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில ்சந்தோஷ் படுகாயம் அடைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த சந்தோசை மீட்டு சிகிச்சைக்காகவும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்தோசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவருக்கு வலைவீச்சு

இது தொடர்பான புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமல்தாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவர் பூந்தோட்டம் அருகில் உள்ள மோட்டாத்தூரை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்