டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்
திருவாடானை அருகே டயர் வெடித்து பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.;
தொண்டி,
ராமநாதபுரத்தில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் திருவாடானையை அடுத்த பாரூர் கிராமத்தின் அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் சாலை ஓரம் இருந்த மைல்கல்லில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டிச் சென்ற டிரைவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கோ ராமன், காரில் இருந்த முருகேசன் மனைவி மீனாட்சி (வயது 65) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு இருவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.