மின்னல் வேகத்தில் மோதி பைக் மீது ஏறி இறங்கிய கார் - தலைக்கவசத்தால் உயிர் தப்பிய இளைஞர்கள்

சென்னை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் ஏறி இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 இளைஞர்கள் உயிர் தப்பினர்.;

Update: 2022-11-16 12:42 GMT

சென்னை,

சென்னை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் ஏறி இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 இளைஞர்கள் உயிர் தப்பினர்.

தரமணி ரெயில்வே நிலையம் எதிரே, அதிவேகமாக வந்த காரானது, சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி பைக்கின் மீது ஏறி இறங்கியது. பைக் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷ் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த ரஞ்சித் ஆகியோர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

இருவரும் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிவேகமாக காரை இயக்கிய ஓட்டுநர் பூபாலனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்