பாலத்தில் மோதி கொளுந்து விட்டு எரிந்த பஸ் - ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்
வந்தவாசி அருகே தனியார் பஸ் ஒன்று பாலத்தின் மீது மோதிய விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது.;
திருவண்ணாமலை,
வந்தவாசி அருகே தனியார் பஸ் ஒன்று பாலத்தின் மீது மோதிய விபத்தில், பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில் இருந்து தப்பிச் சென்றனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.