மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரம்

கொடைக்கானலில் காற்றுடன் பெய்த மழையால் மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்தது.;

Update: 2023-05-03 16:58 GMT

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று சாரல் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் பூம்பாறை- மன்னவனூர் மலைப்பாதையில் குண்டாறு சுடுதண்ணிப்பாறை அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் ½ மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை எந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்