செல்போன் கடையில் திருடிய சிறுவன் கைது
செல்போன் கடையில் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே பரம்பூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 33). இவர் பரம்பூர் கடைவீதியில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு உறவினர் ஒருவரை பார்ப்பதற்கான சென்று விட்டார். இந்நிலையில், கடையின் மேற்கூரையை பிரித்து அங்கிருந்த செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்போன் கடையில் திருடியது அன்னவாசல் அருகே உள்ள பின்னங்குடியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.