குளிர்பானம் என நினைத்து பேன் மருந்து குடித்த சிறுவன் பலி

தென்காசி அருகே குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த சிறுவன் பலியானான். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-10-12 19:00 GMT

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் சுரேஷ். சலவை தொழிலாளி. இவரது குழந்தைகள் யஷ்வந்த் (வயது 4), இஷாந்த் (4). இவர்கள் இரட்டையர் ஆவர்.

நேற்று 2 சிறுவர்களும் வீட்டில் இருந்தனர். அப்போது, பாட்டிலில் இருந்த பேன் பூச்சிக்கு வைத்து இருந்த மருந்தை குளிர்பானம் என நினைத்து யஷ்வந்த் குடித்தான். இதை பார்த்த இஷாந்த்தும் அந்த மருந்தை குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 2 பேரும் தலைசுற்றி கீழே விழுந்தனர்.

ஒருவன் சாவு

இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் பரிதாபமாக இறந்தான். இஷாந்த் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்