கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் மோதி சிறுவன் பலி

வேப்பந்தட்டை அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுவன் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் மோதி பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-09-10 18:30 GMT

கோவில் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (37). இவர்களுக்கு 2 மகள்களும், பரணி (6) என்ற மகனும் இருந்தனர். நெற்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பரணி 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு பரணி தனது தாயுடன் சென்றான். அப்போது அங்குள்ள சாலையில் சிறுவன் பரணி விளையாடி கொண்டிருந்தான்.

சிறுவன் பலி

அப்போது அந்த வழியாக வண்ணாரம் பூண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கரும்பு ஏற்றி ெசன்ற டிராக்டர் சிறுவன் பரணி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுவன் டிராக்டர் மோதி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்