மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்

மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் வாலிபர் பிணமாக தொங்கினார்.;

Update: 2022-12-30 19:41 GMT

ஜெயங்கொண்டம்:

பூ வியாபாரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன். இவர் தற்போது கும்பகோணத்தில் தங்கி உள்ளார். இவரது மகன் அசோக்குமார்(வயது 19). இவர் தனது நண்பர் கணேசனின் அக்காள் வீடான சின்னவளையம் தெற்கு தெருவில் உள்ள மணிகண்டன்- கவுரி தம்பதியின் வீட்டில் சுமார் 3 மாதங்களாக தங்கி, தள்ளுவண்டியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஏதோ மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியானால் அதற்கான காரணம் என்ன? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்