விக்கிரமசிங்கபுரத்தில் ஊருக்குள் ஹாயாக வலம் வந்த கரடி

விக்கிரமசிங்கபுரத்தில் ஊருக்குள் புகுந்த கரடி ஹாயாக வலம் வந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-10-08 20:11 GMT

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், அனவன்குடியிருப்பு, திருப்பதியாபுரம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. விக்கிரமசிங்கபுரம் டாணா, கோட்டைவிளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது இரவு நேரங்களில் கரடி உலா வருகிறது. கடந்த மாதம் கோட்டைவிளைபட்டியில் கலையரசி என்ற பெண்ணை குட்டியுடன் வந்த கரடி தாக்கியது. மேலும் டாணாவில் உள்ள மின்சார அலுவலகத்திலும் கரடி புகுந்தது.

நேற்று முன்தினம் இரவு டாணா பகுதியில் ஒரு கரடி சாலையில் ஹாயாக உலா வந்து உள்ளது. அப்போது அப்பகுதியில் நின்ற நாய்கள் குரைத்ததால் கரடி அங்கிருந்து சென்றுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பாபநாசம் வனத்துறையினர் இரவு நேரத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்