கடைக்கு சென்ற 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

வாலாஜாபேட்டையில் கடைக்கு சென்ற 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-03 18:28 GMT

வாலாஜாபேட்டை தாலுகா அலுவலகம் அருகே சிவலிங்கம் (75) என்ற முதியவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 9 வயது சிறுமி சென்றபோது, முதியவர் சிவலிங்கம், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பெட்டி கடைக்கு சென்று அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாப்பேட்டை போலீசார், முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்