உப்புக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள பாம்பு
உப்புக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள பாம்பு பிடிபட்டது.
உப்புக்கோட்டை வடக்குத்தெருவை சேர்ந்தவர் நாகர் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த நாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான அஸ்வினுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த அஸ்வின் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் சுமார் 9 அடி நீள நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. இதையடுத்து அந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு சின்னமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.