70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது
சேர்வலாறில் 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வலாறில் 70 வயது மூதாட்டி ஒருவர் கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதை பார்த்ததும் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அந்த மூதாட்டி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றது அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து மாடசாமியை போலீசார் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கு அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாடசாமி கடந்த 5 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்வதும், அவர் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மூதாட்டி அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.