ஸ்கூட்டருக்குள் மறைந்திருந்த 7 அடி நீள நல்லபாம்பு
திருவாரூரில் ஸ்கூட்டருக்குள் மறைந்திருந்த 7 அடி நீள நல்லபாம்பை 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.;
திருவாரூரில் ஸ்கூட்டருக்குள் மறைந்திருந்த 7 அடி நீள நல்லபாம்பை 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
ஸ்கூட்டருக்குள் மறைந்திருந்த பாம்பு
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பிரகாசம் தெருவை சேர்ந்தவர் சேகர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் கடைத்தெருவிற்கு செல்ல தனது ஸ்கூட்டரை எடுத்துள்ளார். அப்போது ஸ்கூட்டருக்குள் ஒரு பாம்பு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இதுகுறித்து உடனடியாக திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
போக்கு காட்டியது
அதன்பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சீனிவாசன், முருகையன், உஜிப் ரஹிம், மேகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் ஸ்கூட்டரின் முகப்பு விளக்குக்குள் சென்று மறைந்து கொண்டது. அங்கிருந்து நீண்ட நேரம் பாம்பு வெளியில் வராமல் போக்கு காட்டியது.
இதனையடுத்து முகப்பு விளக்கை கழற்றி பாம்பை லாவகமாக வெளியே எடுக்க முயன்ற போது அது படமெடுத்து சீறியது.
1 மணி நேரத்திற்கு பிறகு பிடித்தனர்
1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 7 அடி நீளமுள்ள நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறத