வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது.;
நாட்டறம்பள்ளியை அடுத்த பாறை வட்டம் கிராமத்தில் காசி என்பரது வீட்டிற்குள் நேற்று ஒரு பாம்பு புகுந்தது. இதனை கண்ட காசி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 6 அடி சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.