மீனவர் வலையில் 30 கிலோ கடல் விரால் மீன் சிக்கியது.

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கடல் விரால் மீன்;

Update: 2023-09-10 18:42 GMT

ஜெகதாப்பட்டினம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இந்த நாட்டுப்படகுகளில் தினந்தோறும் கடலுக்கு மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில், மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்று விட்டு பின்னர் கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன் சிக்கியது. இந்த வகையான மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவது மிகவும் அரிதானது. இந்த விரால் மீனை ஏலத்தில் வியாபாரி ஒருவர் ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்