பஸ்சில் ஏறியபோது மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

ஆலங்குளத்தில் பஸ்சில் ஏறியபோது மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பெண் ஒருவர் பறித்து சென்றார்.

Update: 2023-09-28 18:45 GMT

ஆலங்குளம்:

புளியங்குடியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது மகள், மருமகன் மற்றும் 2 பேத்திகளுடன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து அம்பை செல்லும் பஸ்சில் ஏறினர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் ஒருவர் நைசாக சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சங்கிலியை பறித்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்