150 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது

150 ஆண்டு பழமையான அரசமரம் வேேராடு சாய்ந்தது.

Update: 2022-07-14 20:02 GMT

சோமரசம்பேட்டை:

திருச்சி வயலூர் மெயின்ரோட்டில் இருந்து வயலூருக்கு செல்லும் பிரிவு சாலையில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென வீசிய சூறைக்காற்றில் அந்த மரம் வேேராடு சாய்ந்து அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை மற்றும் வீரமலை என்பவரது குடிசை வீட்டின் மீது விழுந்தது.

 இதில் வீரமலை தலையில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சாலையின் நடுவே மரம் விழுந்து கிடந்ததால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த குமாரவயலூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், சோமரசம்பேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மரம் அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்