14 வயது சிறுமி பலாத்காரம்
திருக்கோவிலூர் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியை மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அரசன் மகன் தர்மா(வயது 22) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் தர்மா மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.