10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

ஊட்டி அருகே பக்கத்து வீட்டிற்கு தண்ணீர் குடிக்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-25 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி அருகே பக்கத்து வீட்டிற்கு தண்ணீர் குடிக்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 68). அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சிறுமியின் தாய் 2-வது பிரசவத்திற்காக சொந்த ஊரான மேட்டுப்பாளையம் சென்று விட்டார். இதனால் சிறுமி தனது பெரியம்மா வீட்டில் வசிப்பதுடன், அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பெண் சிறுமியின் தாயாரை பார்க்க மேட்டுப்பாளையம் சென்றிருந்தார். அந்த சமயத்தில் சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். பின்னர் அவள் அருகே உள்ள சாமிநாதன் வீட்டிற்கு தண்ணீர் குடிக்க சென்றார்.

அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.

முதியவர் கைது

இதனால் பயந்து போன சிறுமி மேட்டுப்பாளையம் சென்று திரும்பிய பெரியம்மாவிடம் நடந்தது குறித்து கூறினாள். இதுகுறித்து சிறுமியின் பெரியம்மா கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் சாமிநாதனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சாமிநாதனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்