ஆரியூர் குளத்துக்கரையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஆரியூர் குளத்துக்கரையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;
அன்னவாசல் அருகே ஆரியூர் குளத்துக்கரையில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சின்னக்கண்ணு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் குளத்துக்கரையில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் நார்த்தாமலை காப்புக்காட்டில் மலைப்பாம்பை பத்திரமாக விட்டனர்.