10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-08-31 18:16 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே பரம்பூரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்