ஆத்தூர் அருகே பரிதாபம் கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி உடல் மீட்பு

ஆத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியானான். தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.;

Update: 2022-12-16 20:06 GMT

ஆத்தூர், 

9-ம் வகுப்பு மாணவன்

ஆத்தூர் அருகே கீரிப்பட்டியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருடைய மகன் கேப்டன் பிரபாகரன் (வயது 14). இவன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை தன்னுடைய நண்பர்களுடன் ஆத்தூர் அருகே உள்ள மலையம்பட்டி கிராமத்துக்கு சென்றான். அங்குள்ள விவசாய கிணற்றில் இறங்கி கேப்டன் பிரபாகரன் குளித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக கேப்டன் பிரபாகரன் கிணற்றில் மூழ்கினான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவன் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடல் மீட்பு

அப்போது கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவன் கேப்டன் பிரபாகரன் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. கிணற்றில் மூழ்கி மாணவன் இறந்த பரிதாப சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்