9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
கோவை, ஜூலை
கோவையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவிக்கு தொந்தரவு
கோவையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவர் கோவையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார். பின்னர் அவர் அந்த மாணவியி டம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அவருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார்.
ஆனாலும் சந்தோஷ்குமார், அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியதாக தெரிகி றது. மேலும் அவர், அந்த மாணவியிடம் காதலிக்குமாறு கூறி கடந்த ஒரு வாரமாக தொந்தரவு கொடுத்து உள்ளார்.
போக்சோவில் கைது
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தோஷ்குமார் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனே சந்தோஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமி களை காதலிக்க வலியுறுத்தி தொந்தரவு செய்வது போச்சோ சட்டத் தில் பாலியல் தொல்லையின் கீழ் வருகிறது. எனவேதான் அவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றனர்.