ஆனைமலையில் இளநீர் டன் ஒன்றுக்கு ரூ.9,750 நிர்ணயம் ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஆனைமலையில் இளநீர் டன் ஒன்றுக்கு ரூ.9,750 நிர்ணயம் ஒருங்கிணைப்பாளர் தகவல்;

Update: 2022-09-12 17:51 GMT

ஆனைமலை

ஆனைமலை தாலுகாவில் 23 ஆயிரம் ஹெக்டர் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. உள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது வெளி மாநிலங்களில் கடும் வெயில் நிலவுவதால் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் இளநீர் விவசாயிகளுக்கு இந்த வாரம் முதல் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை ரூ.28 என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.9,750 என நிர்ணயம் செய்யப்படுகிறது. இளநீர் வரத்தை விட தேவை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்