950 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கடைகளில் மொத்தம் 950 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன;
கோவை
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்பொருட்கள், கேரி பேக்குகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஸ் குமார் அறிவுரையின் பேரில் மண்டல அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் கோவை மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள கடைகளில் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர்.
இதில் சில கடைகளில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட் கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மொத்தம் 950 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.